என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
நிறுத்தப்பட்ட ெரயில்களை முழுமையாக இயக்கக்கோரி திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரம் உயர்த்த வேண்டும்.
திருப்பூர்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை முழுமையாக இயக்க வேண்டும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






