என் மலர்
உள்ளூர் செய்திகள்

படிக்கட்டில் ஏறி நின்று கொண்டிருக்கும் மாணவர்களை படத்தில் காணலாம்.
உடுமலையில் பஸ் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் சாகச பயணம்
- போலீசார் குறிப்பிட்ட நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
- கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அரசு கலைக் கல்லூரி எலைய முத்தூர் பிரிவு சாலையில் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடுமலையில் இருந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியவாறு விபரீத பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே உடுமலை போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
அரசு பஸ் மிக குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் தனியார் பஸ்சில் உயிரை துச்சமாக நினைத்து பயணிக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கூறி மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே மாணவர்கள் நலன் கருதி போலீசார் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






