search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெயிலால் கறிக்கோழி உற்பத்தி செலவு அதிகரிப்பு
    X

    கோப்புபடம்.

    கோடை வெயிலால் கறிக்கோழி உற்பத்தி செலவு அதிகரிப்பு

    • கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கறிக்கோழிகளின் எடை குறைகிறது.
    • பத்தாயிரம் கோழிகள் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பண்ணைக்கு தினசரி 3 ஆயிரம் லிட்டர் வரை தேவை.

    பல்லடம் :

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கறிக்கோழிகளுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது குறித்து பல்லடம் பகுதி பண்ணையாளர்கள் கூறியதாவது :- கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கறிக்கோழிகளின் எடை குறைகிறது. வெப்பத்திலிருந்து கறிக்கோழிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேற்கூரைகளில் தென்னங்கீற்றுகள் பரப்பி வைத்தல், ஸ்பிரிங்லர் முறையில் தண்ணீர் தெளித்தல், பண்ணைக்குள் மின் விசிறி ஓட வைத்தல் என பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

    இரண்டு கிலோ எடை கொண்ட கோழி, 300 மீட்டர் வரை தண்ணீர் குடிக்கும். கோடை காலம் என்பதால், அரை லிட்டர் மேல் தண்ணீர் எடுத்துக் கொள்கின்றன. பத்தாயிரம் கோழிகள் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பண்ணைக்கு தினசரி 3 ஆயிரம் லிட்டர் வரை தேவை. தற்போது கோடை என்பதால் 5 ஆயிரம் லிட்டராக இது அதிகரித்துள்ளது.தற்போது கொள்முதல் விலை கிலோ 107 ரூபாயாக உள்ளது. தண்ணீர் லிட்டர் 11 பைசா என்ற கணக்கில் விலைக்கு வாங்கி பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்கு கூடுதலாக செலவாவதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×