search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் தாய்ப்பால் வார விழா
    X

    பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்ட காட்சி.

    பல்லடத்தில் தாய்ப்பால் வார விழா

    • தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
    • நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,மற்றும் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ஆறுமுகம், பட்டய தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார்.இதில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:-தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் மிகவும் நல்லது. இன்று பவுடர் பால்கள் அதிகரித்து விட்டன.

    பவுடர் பால் குடிக்கும் குழந்தை கொழு, கொழுவேன இருக்கும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.தாய்ப்பாலின் எதிர்ப்பு சக்தி மிக அதிகமானது. நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் தாராளமாக கொடுக்கலாம். கர்ப்பிணிகள் காய்கறிகள், கீரைகள் பழ வகைகள் உண்பது மிகவும் நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த உறுதிமொழிஎடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி தாய்ப்பால் திட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், லோக சதீஸ்வரன்,மற்றும் யுவராஜ் மகேஷ், கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×