search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்த்தீனியத்தை களை எடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
    X

    கோப்புபடம்.

    பார்த்தீனியத்தை களை எடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

    • கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று.
    • விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.

    உடுமலை :

    பார்த்தீனியம் களைச்செடியை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து, அவர் கூறியதாவது:- கட்டுப்படுத்த முடியாத 7 களைச்செடிகளில் பார்த்தீனியமும் ஒன்று. ஒருங்கிணைந்த களை மேலாண்மை வாயிலாக இதைக் கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இச்செடிகளின் அதிக வளர்ச்சி, பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுக்கும்.மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியத்தை அழிக்கும் என்பதால் அவற்றை பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.பூங்கா, தோட்டங்கள், புல் தரைகள் மற்றும் விவசாய நிலங்களில் பார்த்தீனியத்தை வேரோடு அகற்றுவது அவசியம். தொடர்ந்து பார்த்தீனியம் வளர்ந்தால், கட்டுப்படுத்த வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×