என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன்.
பல்லடம் கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
- அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது.
பல்லடம்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், கடைவீதி மாகாளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






