என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உகாயனூர் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்
    X

    ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றக் காட்சி.

    உகாயனூர் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்

    • குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் கைரேகை மற்றும் கருவிழி பதிவை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்.
    • இந்த முகாமில் புதிதாக அஞ்சலக கணக்கும் துவங்கலாம்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் நேற்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ் தொடங்கி வைத்தார். உகாயனூர் ஊராட்சி மற்றும் தபால் அலுவலகம் இணைந்து 2 நாட்கள் நடத்தும் இந்த முகாமில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பாலினம் ஆகியவை திருத்தம் செய்யலாம்.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் திருமண பதிவு சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று இருந்தால் புதிதாக ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் கைரேகை மற்றும் கருவிழி பதிவை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். புகைப்பட சான்றுக்காக பான், பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கொண்டு வரவும்.

    மேலும் வீட்டு வரி ரசீது, மின்கட்டண ரசீது, பேங்க் பாஸ் புக் ஆகியவை முகவரி சான்றுக்காகவும், பிறப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை பிறந்த தேதி சான்றுக்காகவும் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் புதிதாக அஞ்சலக கணக்கும் துவங்கலாம். இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.

    Next Story
    ×