என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வலது நெஞ்சில் வாசுகி என்ற பச்சை குத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் ஊத்துக்குளி ரெயில் நிலையத்திற்கும் - திருப்பூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர் சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பலியான நபர் முழு கை சட்டை, காபி கலர் டிராயர், கத்திரி ப்ளூ கோடு போட்ட லுங்கி அணிந்திருந்தார். வலது நெஞ்சில் வாசுகி என்ற பச்சை குத்தப்பட்டுள்ளது, இடது நெஞ்சில் ஹார்ட் படம் வரைந்து கே.எஸ். என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. இடது கையில் கருப்புசாமி புகைப்படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. இறந்தவர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






