search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா - இல்லம் தேடி கல்வி பயிற்சியாளர்களுக்கு பயிற்சி
    X

    கோப்புபடம்.

    ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா - இல்லம் தேடி கல்வி பயிற்சியாளர்களுக்கு பயிற்சி

    • மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது.
    • மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

    உடுமலை :

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.அனைத்து தரப்பு மாணவர்களும் அறிவியலை அணுகக் கூடியதாகவும், அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் இத்திருவிழா கொண்டுள்ளது.மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் நடக்கிறது.

    இது குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட நிர்வாகிகள் கூறியதாவது:- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கணிதத்தை எளிமையாக கற்றல், அறிவியல் அற்புதங்களை ஆராய்தல், உள்ளூர் வளங்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளை கண்டறிதலை உள்ளடக்கியுள்ளது. விளையாட்டுகள் மற்றும் பாடல்கள், ஒரிகாமி எனும் காகிதக்கலை பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த திருவிழா நடக்கிறது.மொத்தம் 13 ஆயிரம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்களுடன் இணைந்து கோடை விடுமுறை காலத்தில் கிராம அளவில் குழந்தைகளை சந்தித்து அறிவியல் திருவிழாவை நடத்த உள்ளனர்.ஒவ்வொரு குழந்தையும், அவர்களது இல்லங்களுக்கு சென்று கற்றலை தொடர உள்ளதால், இந்த முன்னெடுப்பு, ஆயிரமாயிரமாக பல்கிபெருகி நோக்கத்தை நிறைவு செய்யும்.இது குழந்தைகளிடையே, அறிவியல் பாடப்பிரிவுகளின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×