என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
வடமாநில தொழிலாளியை தாக்கியதாக பனியன் நிறுவன உரிமையாளர் மீது பரபரப்பு புகார்

- சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்டடனர்.
- காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் சி.ஐ.டி.யூ., பனியன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஸ்ரீநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் கம்பெனியில் திலீப்குமார் என்ற பீகார் மாநில தொழிலாளி வேலை செய்து வந்தார். சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்ட போது, சம்பளம் தரமறுத்ததுடன், முதலாளி, நிர்வாக ஊழியர் ஆகியோர் சேர்ந்து, திலீப்குமாரை தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், காயமடைந்த திலீப்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 8.9.2023 அன்று கம்பெனி முதலாளி மற்றும் போலீசார் சிலர் அரசு மருத்துவமனைக்கு சென்று, திலீப்குமாரை மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்துளளனர்.
மேலும் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளி தனது புகாரை வாபஸ் பெறவில்லை.
ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியினால் ஏற்பட்ட பதட்டம் முற்றிலும் தணியாத நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திருப்பூர் நகரின் அமைதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பீகார் மாநில தொழிலாளியான திலீப்குமாரை தாக்கிய கம்பெனி முதலாளி மற்றும் ஊழியர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.