என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
முத்தூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு
- ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பின்புறமாக பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.
- வண்டியின் பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் காணாமல் போயிருந்தது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் தொட்டியபாளையம் பொட்டுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது47). இவர் முத்தூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பின்புறமாக பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.
பின்பு வெள்ளகோவில் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றபோது அங்கு கூட்டமாக இருந்ததால் பணத்தை கட்டாமல் வந்துள்ளார். மகாலட்சுமி நகரில் உள்ள உரிமையாளரின் வீட்டுக்கு சென்று வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு பின்பு மீண்டும் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு சென்றார். அங்கு வண்டியின் பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் காணாமல் போயிருந்தது. அதிர்ச்சியடைந்த கவிதா இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






