என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
காங்கேயம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி சாவு
- மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கேயம் :
காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.
தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.