என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்களின் காட்சி.

    பல்லடம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது

    • காரில் இருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
    • இவர்கள் கூட்டாக சேர்ந்து, பூட்டியுள்ள வீடுகளை பார்த்து கொள்ளையடித்து செல்லும் நோக்கத்தில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சின்னக்கரைபகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 3 பெரிய பட்டாகத்திகள் இருந்தன. இதுகுறித்து காரில் இருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது காரில் இருந்த 4 பேர் தப்பி சென்றனர். காரின் ஓட்டுநர் மட்டும் சிக்கிக் கொண்டார். மேலும் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களையும் போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

    அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த ரஜினிகாந்த் மகன் ரோகன்(வயது 22), பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் சுரேஷ்(23) கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த முக்கூர் சாமி மகன் முத்துகிருஷ்ணன்(22) அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் அண்ணாமலை(22) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கூட்டாக சேர்ந்து, பூட்டியுள்ள வீடுகளை பார்த்து கொள்ளையடித்து செல்லும் நோக்கத்தில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 கார், 3 மோட்டார் சைக்கிள்கள், 3 பெரிய பட்டாக்கத்திகள், ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இவர்களுடன் வந்து தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்கள் மீது கோவை, சூலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில், திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×