என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் என்று கூறி தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறித்த 3 பேர் கைது
    X

    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    போலீசார் என்று கூறி தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறித்த 3 பேர் கைது

    • தொழிலாளர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.
    • கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பல்லடம்:

    பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் தங்கராஜ். இவரது நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 3 ஆசாமிகள் நுழைந்தனர். அவர்கள் "நாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், கஞ்சா உள்ளதா? என சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி தொழிலாளர்களை மிரட்டினர். மது போதையில் இருந்த அந்த ஆசாமிகள், தொழிலாளர்களின் அறைக்குள் நுழைந்து தொழிலாளர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

    இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த தங்கராஜ் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் பாண்டியன் (வயது 22), சேடபாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் கமலக்கண்ணன் (22) மற்றும் கரைப்புதூரை சேர்ந்த குப்புசாமி மகன் குரு (27) என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் போலீஸ் என்று கூறி வடமாநில தொழிலாளிகளிடம் பணம் மற்றும் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் பாண்டியன் என்பவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளதாக தெரிவித்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×