என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
- இருதரப்பினரிடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
- தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 35). இவரது வீடு அருகே வசிக்கும் ஐயப்பன் ( 24), சதீஷ் ( 23) ஆகியோருக்கும் இடையே கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் அரசனை அவர்கள் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஐயப்பன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story