என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே குடிபோதையில் ஓட்டலில் தகராறு செய்த 2 பேர் கைது
- குடிபோதையில் வந்த 2 பேர் மேலும் குடிக்க மதுபானம் கேட்டுள்ளனர்.
- உணவகத்தின் உரிமையாளர் கோகுல் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் மேலும் குடிக்க மதுபானம் கேட்டுள்ளனர். உணவகத்தார் மதுபானம் இங்கு இல்லை என சொல்லியுள்ளனர். இதனை கேட்காமல் தொடர்ந்து மது கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உணவகத்தின் உரிமையாளர் கோகுல் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் உணவகத்தில் தகராறு செய்த பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 29) ,செந்தூரன் காலனியை சேர்ந்த பிரகாஷ் குமார்(30) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






