என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் படகு சவாரி செய்யும் இடம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
- வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்
- ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இம்மலை தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களில் சிறந்த சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது.
அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்கள் உள்ளடக்கிய இந்த மலையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் இடமாகவும் ஏலகிரி மலை திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு வெளிநாடுகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்
இங்கு பயணிகளின் பொழுது ேபாக்கிற்காக படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன.
மேலும் இங்கு 50-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் அனைத்து தனியார் விடுதிகளிலும் நிறைந்து காணப்படும் நிலையில் வரும் முன்னரே முன்பதிவு செய்து விட்டு வருகின்றனர்.
இங்கு ஏராளமான தனியார் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் அரசு சுற்றுலா தலமாக படகு இல்லமும், இயற்கை பூங்காவும், மற்றும் மங்களம் சுவாமி மலை ஏற்றம் உள்ளிட்ட ஒரு சில இடம் மட்டும் உள்ளது.
வார விடுமுறையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஏலகிரி மலையில் மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் ஏலகிரி மலை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.






