புத்து மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் காணிக்கை

131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளி பணத்தை எண்ணும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்
புத்து மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் காணிக்கை
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள புத்துக்கோவில் கிராமத் தில் மிகவும் பழமை வாய்ந்த புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் , அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் கோவிலில் பக் தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது . வேலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில் வாணியம்பாடி சரக ஆய்வர் ரவிக்குமார், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் , உண்டியல்களில் ரூ .13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கமாகவும் , 131 கிராம் தங்கம் மற்றும் 143 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com