என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயதை படத்தில் காணலாம்.
விடிய, விடிய பலத்த மழை
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
- சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திடீரென பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை
இதேபோல ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் இரவு சுமார் 7 மணியிலிருந்து திடீரென பலத்த மழை பெய்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்: ராணிப்பேட்டையில் 64.6.மி.மீ, பாலாறு அணைக்கட்டு 34.2 மி.மீ, வாலாஜாவில் 72 மி.மீ, அம்மூரில் 42.மி.மீ,ஆற்காட்டில் 74.2.மி.மீ, அரக்கோணத்தில் 62.4.மி.மீ, மின்னலில் 8.2.மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 34 மி.மீ, பனப்பாக்கத்தில் 24.8 மி.மீ, சோளிங்கரில் 21 மி.மீ, கலவையில் 42.8மி. மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 480.2மி.மீ., , மாவட்ட சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.






