என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரில் வெளிமாநில மது கடத்தியவர் கைது
- 78 ஆயிரம் மதிப்பிலான பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 27 பெட்டி களை கொண்ட சுமார் 78 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணை யில் அவர் பெங்களூரு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் ( வயது 41 ) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து காருடன் மது பாக்கெட்ளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story