search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமண விழாவில் விருந்து சாப்பிடுபவர்கள் மீதும் வழக்கு பதிவு
    X

    குழந்தை திருமண விழாவில் விருந்து சாப்பிடுபவர்கள் மீதும் வழக்கு பதிவு

    • கலெக்டர் எச்சரிக்கை
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்லவநாதன் முன்னிலை வகித்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எழுந்து நின்று தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கும் பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    எங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலை வர கூடாது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அவர் கண்ணீர் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி மாவட்ட வேண்டுகோள் வைத்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தை திருமணம் செய்வது கூடாது அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தை திருமணம் நடத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள், திருமண விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள், என அனைவரின் மீதும் வழக்குபதிவு செய்யப்படும்.

    அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெண் சிசு பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்வகின்றனர்.

    இதனால் பெண் பிள்ளைகள் பிறப்பு குறைவாக உள்ளதாகவும் அதற்கு துணை போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி,சப் கலெக்டர், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×