என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் டீக்கடையில் கத்திமுனையில் கொள்ளை- 3 பேர் கைது
- டீக்கடைக்கு வந்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி கடை ஊழியரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
- வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
போரூர்:
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகு. அதே பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி கடை ஊழியரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது `நாங்கள் 3 பேரும் இந்த ஏரியாவில் மிகப்பெரிய ரவுடிகள், எனவே தினசரி எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்' என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் திடீரென கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4,200 ரொக்கப்பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்டங்கள், குளிர்பானங்கள், சிகரெட் பாக்கெட்டுகளையும் அள்ளிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ராமாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய அதே பகுதியை சேர்ந்த குகன், அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த தங்கராஜா, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஆதி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






