search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
    X

    ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் முனியாண்டி பேசிய காட்சி.

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்களின் கருத்துகளின்படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்ப ணிக்கான இ-டெண்டரை அந்த ஊராட்சிகளிலே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சிவகங்கை முனியாண்டி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டமைப்பு மாவட்ட தலைவர் உமரிக்காடு ராஜேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    11 அம்ச கோரிக்கை

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்களின் கருத்துகளின்படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பேற்று 3½ ஆண்டு ஆகிறது. இந்த கூட்டம் 3-ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மீட்கும் வகையிலும், ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ. 30 ஆயிரமும், ஓய்வு ஊதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்குவது உட்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அனைவரும் தபால் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

    ஒருங்கிணைப்பாளர் சித்திரவேல் ராமசாமி, இணைச் செயலாளர் சித்திரைபாண்டி, ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் விளாத்திகுளம் ரவீந்திரன், கோவில்பட்டி ரத்தினவேல், கருங்குளம் அருணாச்சலம் வடிவு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், ரஜினிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி யூனியனில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் குமாரகிரி ஜாக்சன் துரைமணி, அய்யனடைப்பு அதிர்ஷ்ட கணபதி ராஜேந்திரன், முள்ளக்காடு கோபி நாத்நிர்மல், கட்டாலங்குளம் சங்கரேஸ்வரி ஏசுவடியான், அல்லிகுளம் ஆனந்தி மாரிமுத்து, திம்மராஜபுரம் சித்திரை செல்வன் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பு மாநில தலைவர் சிவகங்கை முனியாண்டி பங்கேற்று சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    1994-ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஊராட்சி களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசால் பறிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி, அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது ஏற்புடையதல்ல.

    பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஆடு -மாடு கொட்டகை பயனாளிகள் தேர்வு செய்ய ஊராட்சிமன்றம் மற்றும் கிராம ஊராட்சிசபை தீர்மா னங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்ப ணிக்கான இ-டெண்டரை அந்த ஊராட்சிகளிலே நடத்த அனுமதிக்க வேண்டும்.

    தற்போது ஊராட்சிகளில் ஆன்லைன் வரிவசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பழைய வரிகளை வசூலிப்பதில் சிரமம் உள்ளது. எனவே கட்சி பாகுபாடு இன்றி அனைத்து ஊராட்சித் தலைவர்களும் செயல்பட வேண்டும். முதல்-அமைச்சர், கவர்னர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் கோரிக்கை தபால்களை அனுப்ப வேண்டும்.

    பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் வருகிற 31-ந்தேதி 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் கருப்பு சட்டை அணிந்து சென்னை யில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஊராட்சி களுக்கு தேவையான மின்விளக்கு, குழாய் பைப்புகள், குப்பைத் தொட்டிகள், பேட்டரி வண்டிகள், டிரைசைக்கிள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரண பொருட்கள் அனைத்தும் ஊராட்சிகளின் நிதி நிலைக்கு தக்க ஊராட்சி நிர்வாகமே கொள்முதல் செய்யவும், மின்சாரம் கட்டணங்களை செலுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.

    Next Story
    ×