என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள்.
கட்டுமான பணியில் சிலைகள் கண்டுபிடிப்பு

- ஆலங்குடியில் வீடு கட்டுமான பணியில் 4 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் கடந்த மாதம் 19-ம் தேதி வீடு கட்டுமான பணியின் போது ஐம்பொன்னாலான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் சில நாட்கள் கழித்து பணிகள் தொடங்கி நடந்து வந்தன. அப்போது தூர்வாரும் எந்திரம் மூலம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
அப்போது மண்ணுக்கு அடியில் ஒரு சிலை தென்பட்டது. உடனடியாக மேலும் மண்ணை தோண்ட தோண்ட சிலைகள் தென்பட்டு கொண்டே இருந்தது.
அதில் அமர்ந்த நிலையில் உள்ள பெருமாள் சிலை, இரண்டு அடி உயரம் உள்ள சிலைகள் என மொத்தம் 4 சிலைகள் மற்றும் சிறு சிறு உலோகத்தாலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வட்டாட்சியர் அலுவலக பதிவரையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்டெடுக்கப்ட்ட சிலைகளின் தொடர்ச்சியா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.