search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • மேல்மா சிப்காட்டுக்கு எதிராக நடத்தினர்
    • சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ ரத்து செய்ய வேண்டும். காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத்தர தவறிவிட்டது.

    விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுத்த தி.மு.க. அரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தக்க பாடம் புகட்டுவோம்.

    சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்காக தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்க ப்பட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார்.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×