என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறு பரப்பிய விக்கிரவாண்டி பா.ம.க. உறுப்பினர் கேரளாவில் சிக்கினார்
    X

    திருமாவளவன் எம்.பி. குறித்து அவதூறு பரப்பிய விக்கிரவாண்டி பா.ம.க. உறுப்பினர் கேரளாவில் சிக்கினார்

    • திருமாவளவன் எம்.பி., குறித்து சமூக வலைதள ங்களில் அவதூறாக பேசி விடியோ வெளியிட்டார்.
    • தனிப்படை போலீசார் முருகவேலை நேற்று இரவு மடக்கிப் பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடு த்த பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 28). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., குறித்து சமூக வலைதள ங்களில் அவதூறாக பேசி விடியோ வெளியிட்டார்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செய லாளர் வெற்றிவேந்தன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முருகவேலை தேடி வந்தனர். பா.ம.க. உறுப்பினர் முருகவேலை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி விழுப்புரம் - வழுதாவூர் சாலையில் தொராவி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். முருகவேல் விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசங்சாய் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் முருகவேலை தேடி வந்தனர். முருகவேலின் செல்போன் டவரை வைத்து பெங்களூருவில் இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் முருகவேலை நேற்று இரவு மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்து விழுப்புரம் அழைத்து வந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×