search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் தேர்பவனி
    X

    தேர்பவனி நடைபெற்றது.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் தேர்பவனி

    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி.
    • பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    கும்பகோணம்,:

    திருப்பனந்தாள் ஒன்றியம், மானம்பாடியில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா கடந்த 9-ந்தேதி மறைமாவட்ட உதவி பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் ஜெபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

    முன்னதாக திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியான் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

    இனைததொடர்ந்து நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்த வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமை ஆரோக்கியசாமி யாக்கோப் தலைவர் இஸ்ரேல் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×