என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் நீண்ட நேரமாக நின்றுகொண்டு வெளியே வராத ஆசிரியையால் பரபரப்பு
    X

    ஆற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட ரேவதி.

    ஆற்றில் நீண்ட நேரமாக நின்றுகொண்டு வெளியே வராத ஆசிரியையால் பரபரப்பு

    • வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார்.
    • தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஹரிநகரை சேர்ந்தவர் ரேவதி. இவர் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் வீட்டுக்கு நடந்து வரும் போது இவரது கழுத்தில் கிடந்த செயினை மர்மநபர்கள் அறுத்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதி தனது குடும்பத்தினரும் கூறியுள்ளார் ‌‌.

    ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரேவதி திடீரென வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றில் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார். வெகு நேரமாக தண்ணீரில் நின்று கொண்டிருந்தார்.

    அவரது குடும்பத்தினர் கூப்பிட்டு பார்த்துட்டு பயனில்லை. இந்த நிலையில் இன்று தஞ்சை பள்ளி அக்ரஹரத்தில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரிடம் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக மேயர், ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×