என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடி அருகே தோட்டத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மின் வயர்கள் திருட்டு
- பணகுடி அருகே தோட்டத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மின் வயர்கள் திருட்டு
- சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் போர்வெல் கிணறு மின் வயர்களை வெட்டி எடுத்து சென்றுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
பணகுடி:
பணகுடி அடுத்த வடலிவிளையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவருக்கு அங்கு சொந்தமான சுமார் 45 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை பயிர் நடவு செய்யப்பட்டு வளர்த்து வருகிறார். இதற்காக பெருமாள் தன்னுடைய இடத்தை சுற்றி சுமார் 4 போர்வெல் கிணறு அமைத்து அதிலிருந்து வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்.
நேற்று இரவு மர்ம நபர்கள் அவருடைய தோட்டத்திற்கு சென்று மின் வயர்களை அரிவாளால் வெட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பெருமாள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடலிவிளை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் போர்வெல் கிணறு மின் வயர்களை வெட்டி எடுத்து சென்றுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.