என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி மும்முரம்
    X

    ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி மும்முரம்

    • தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது.
    • கடந்த 2 நாட்களாக கூடலூரில் மழையில் தாக்கம் அடியோடு குறைந்து விட்டது.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. தொடர்ந்து ஏராளமான இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்தது. தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது. இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கூடலூரில் மழையில் தாக்கம் அடியோடு குறைந்து விட்டது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 4 குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் என பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்றனர்.

    ெவட்டி அகற்றம் இதையடுத்து தாசில்தார் சித்தராஜ் தலைமையிலான குழுவினர் கூடலூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் சென்று எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆபத்தான மரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை தளவாட பொருட்களை கொண்டு அறுத்து அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இதேபோல் கூடலூர்-ஓவேலி செல்லும் சாலைகளில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் மழை குறைந்துவிட்ட சூழலில் முன்னெச்சரிக்கையாக சாலையோரம் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழை பெய்தாலும் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×