என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா நாளை நடக்கிறது
- ஆடி அமாவாசையான நாளை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுகிறது.
- இரவில் அப்பர் கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறும்.
அதன்படி ஆடி அமாவாசையான நாளை ( புதன் கிழமை ) அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுகிறது. நாளை காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி அங்கு புரோகிதர்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாரப்பரை தரிசித்து வழிபட்டு செல்வர்.
மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இரவில் ஐயாரப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.
Next Story






