என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளி ஆண்டுவிழாவுக்கு தாம்பூலம் வைத்து மாணவர்களை அழைத்த ஆசிரியர்கள்
  X

  மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் தாம்பூலம் வைத்து அழைத்தனர்.

  பள்ளி ஆண்டுவிழாவுக்கு தாம்பூலம் வைத்து மாணவர்களை அழைத்த ஆசிரியர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
  • மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு வைத்து விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

  இப்பள்ளியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணை தலைவர் வீரராசு, துணை செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமாக திருமண விழாக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பது போல் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பள்ளி ஆண்டு விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

  Next Story
  ×