search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய, மாநில அரசு தடை செய்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பதும் வாங்குவதும் மிகப்பெரிய குற்றம் - வேளாண்மைத்துறை எச்சரிக்கை
    X

    மத்திய, மாநில அரசு தடை செய்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பதும் வாங்குவதும் மிகப்பெரிய குற்றம் - வேளாண்மைத்துறை எச்சரிக்கை

    • பருத்தியில் பஞ்சு உள்ள விதை, பஞ்சில்லாத விதைகள் என 2வகைகள் உள்ளன.
    • பி.டி 2என்பது பருத்தி செடியில் வளரும் காய்ப்புழு பாதிப்பை அழிக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகும்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விஜயா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியில் பஞ்சு உள்ள விதை, பஞ்சில்லாத விதைகள் என 2வகைகள் உள்ளன. இதில் பஞ்சில்லாத விதைகள் பி.டி 2 என அழைக்கப்படுகிறது. பி.டி 2என்பது பருத்தி செடியில் வளரும் காய்ப்புழு பாதிப்பை அழிக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகும். இந்த விதைகள் அரசால் அனுமதியளிக்கப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே பி.டி 2பருத்தி விதைகளை வாங்க வேண்டும்.

    உரிமம் பெறாத கடைகளிலோ அல்லது தனி நபரிடமோ அல்லது விதை விற்பனை ரசீது வழங்காதவர்களிடமிருந்து விதைகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசி னால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு திறனுடைய பருத்தி விதைகளை கண்டிப்பாக வாங்கக்கூடாது.

    பருத்தி பாக்கெட்டில் ஓபல் பச்சை நிற விவர அட்டை இல்லாமல் வேறு நிறம் இருந்தால் அவ்விதைகளை விவசாயிகள் வாங்கக்கூடாது. விவர அட்டையில் வரிசை எண், குவியல் எண், சோதனை நாள், பொதிகட்டும் நாள், காலாவதி நாள், நிகர எடை விதையில் விதை நேர்த்திக்கான பூச்சி மருந்து கலந்த விவரம் என 14 விவரங்கள் இல்லாமல் குறைவான அச்சடிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அதை வாங்க கூடாது. இவற்றிற்கு மத்திய அரசின் மரபணு பொறியியல் செயற்குழு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

    இந்த விதைகளை வாங்கி நிலத்தில் விதைத்தால் மண்ணின் வளம் கெட்டு போகும். மேலும், இந்த விதைகளில் முளைக்கும் செடிகளில் பூ பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுப்புறசூழல் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. எனவே, விவசாயிகள் உரிமம் பெற்ற கடைகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற பருத்தி விதைகளை மட்டுமே வாங்கி பயிரிட வேண்டும். மேலும், விவர அட்டையின் நிறம் குறைபாடு மற்றும் விவர அட்டையில் 14விவரங்கள் இல்லாமல் குறைபாடு உள்ள விதைகளை வாங்கினாலும் அல்லது விற்றாலும் வாங்கிய விவசாயிகளின் மீதும், விற்பனை செய்வோர் மீதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழும், நீதிமன்ற நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு அனுமதி பெறாத விதைகளை வாங்குவோருக்கும், விற்போருக்கும் 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1லட்சம் அபராதம் சேர்த்து விதிக்கப்படும். விவசாயிகள் களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய பருத்தி விதைகளை பெற்று நடவு செய்வதோ அல்லது விதைகள் உற்பத்தி செய்வதோ கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×