என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சைக்கு வந்த பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சைக்கு வந்த பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு

- தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
- தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பன்முக தன்மையை விளக்கிடும் வகையில் முத்தமிழ் தேர் நேற்று தஞ்சைக்கு வந்தது.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில வந்த தேருக்கு மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பலர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஊா்தி 'எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்' என முழங்கிய கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
தேரில் இருந்த கருணாநிதி சிலைக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊா்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல உள் அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமா்ந்திருப்பது போன்ற சிலை, அவா் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் அவைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மூலம் பெறும் வசதி ஏற்படுத்தபட்டு உள்ளது.
இந்த தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி (தஞ்சை), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூநடராஜமணி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அம்மா ப்பேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.வி.கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், அம்மாபேட்டை பேரூராட்சி துணை தலைவர் தியாக.சுரேஷ், தகவல் தொழி ல்நுட்ப பிரிவு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராதாகி ருஷ்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபாண்டி, கிளை செயலாளர் ராஜேந்திர சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
