search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெங்குமரஹடா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    தெங்குமரஹடா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • 2 ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அரவேணு

    கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட தெங்குமரஹடா ஊராட்சி நீலகிரி மலை அடிவாரத்தின் அமைந்துள்ளது. இதற்கு மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று மாயார் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

    இங்கு வாழும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு தான் வர வேண்டும். கிட்டத்தட்ட தனித்தீவு பகுதியை போல் அமைந்துள்ளது இந்த கிராமம். ஊரின்‌ முழு தோற்றம் கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்க்கும் பொழுது மிக அருமையாகவும், அழகாகவும் தெரியும். தெங்குமரஹடா அல்லிமாயார் இவ்விரு ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சோலூர் மட்டம் அடிவாரத்தில் அமைந்துள்ளது, அடர்ந்த வனப் பகுதி என்பதால் மேட்டுப்பாளையம் சத்தி சாலை வழியாக மாயார் ஆற்றை கடந்து அந்த கிராமமக்கள் செல்ல வேண்டும்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பவானிசாகர் போன்ற கிராமங்களுக்கு செல்ல தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.

    பரிசல்களில் ஒரு சில மக்கள் இக்கரையில் இருந்து அக்கரை சென்று அத்தியாவசிய பொருட்களுக்காகவும் தங்கள் வேலைவாய்ப்புக்காகவும் செல்கின்றனர். தெங்குமரஹடா பகுதிக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே செல்லும். தற்போது ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்வதால் அந்த பஸ் வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெங்குமரஹடாவில் மாயார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வெறும் கனவாக மட்டுமே சென்றுவிடுமோ என்ற கேள்வி தற்போது அப்பகுதி மக்களிடத்தில் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×