என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா ஆய்வு செய்த காட்சி.
சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
- சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- பள்ளிகளில் காலை உணவு திட்டங்கள் செயல்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார்.
சேலம்:
சேலம் மாவட்ட கண்கா ணிப்பு அதிகாரியாக இருப்ப வர் சிவா சண்முகராஜா. இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.
அப்போது உணவு தயாரிக்கப்படும் விதம் ,உணவு விநியோக முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாநகரில் உள்ள பள்ளிகளில் எவ்வளவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என விவரத்தை கேட்டு அறிந்தார். தொடர்ந்து சேலம் பழைய பஸ் நிலையப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார் .
தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், பணி கள் எப்போது முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிக ளிடம் கேட்டறிந்தார்.
பன மரத்துப்பட்டி பகுதியில் வகுப்பறை கட்டிடம் , ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் தடுப்பணை அமைக்கும் பணிகள், தனிநபர் குடிநீர் இணைப்பு பணிகள் உட்பட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், உட்பட பலர் உடன் இருந்தனர்






