search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் இன்று குமரி புறப்பட்டன
    X

    நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் இன்று குமரி புறப்பட்டபோது எடுத்த படம் 

    நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் இன்று குமரி புறப்பட்டன

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    Next Story
    ×