search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிச்சநல்லூரில்  அருங்காட்சியகத்திற்கு 5-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா - மத்திய மந்திரியை சந்தித்த பின் ஆய்வாளர்கள் உறுதி
    X

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை தொல்லியல் ஆய்வாளர்கள் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்திற்கு 5-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா - மத்திய மந்திரியை சந்தித்த பின் ஆய்வாளர்கள் உறுதி

    • முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டி ருந்தார்.

    அடிக்கல் நாட்டுவிழா

    இதையடுத்து முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிகள் நிறைவடைந்து தற்போது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆராய்ச்சியாளர்கள் தகவல்

    இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் கிஷோர் பாஷா, கூடுதல் தலைமை இயக்குநர் குருமீட் சாவ்லா, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    அதில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தகவலை தெரிவித்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனுமதி அளித்துள்ளார். இந்த தகவலை ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    முதுமக்கள் தாழிகள்

    இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் கண்ணாடியின் மேல் இருந்த படியே உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முக்கியமான ஆய்வாளர்கள் அதிகாரிகள் வரும்போது கீழே இறங்கி சென்று பார்க்கும் வண்ணம் இந்த இடத்தில் இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 5-ந் தேதி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற உள்ளதாகவும், முதலில் சி சைட்டிலும், பின்னர் பி சைட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×