search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும்
    X

    தேசிய திருக்கோயில்கள் மாநாட்டில் சூரியனார்கோவில் ஆதீனம் பேசினார்.

    சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும்

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுயாட்சி பெற்ற கோவிலாக மாற்ற வேண்டும்.
    • கிராம கோவில் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது. மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் துரை.கோவிந்தராஜன் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தேசிய பொது செயலாளர் வக்கீல் சந்திரபோஸ், தேசிய துணை தலைவர் டாக்டர் பழனிக்குமார், தமிழ்நாடு, பாண்டிச்சேரி முஸ்லீம் ராஷ்டிரிய மன்ஞ்ச் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஷாகுல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு என்னும் நூலை சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் வெளியிட்டு பேசினார்.

    இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் சைவ, வைணவ, ஆதீனங்களின் வழிகாட்டுதல்படி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பை விரிவுபடு த்தி வளர்க்க வேண்டும். சிதிலமைந்து இடிபா டுகளுடன் உள்ள சைவ, வைணவ கோவில்களை கண்டறிந்து புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்திட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் சுப்பிரமணியர், பழனி தண்டாயுதபாணி ஆகிய கோவில்களை சுயாட்சி பெற்ற கோவில்களாக மாற்றிட வேண்டும். கிராம கோவில் ஒன்றை அரசு அமைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவே ற்றப்பட்டன.இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கிராம கோயில் திருப்பணி செம்மல் யுவராஜ் அமிழ்தன், தாணி கோட்டகம் ராமலிங்கம், தஞ்சை மகேந்திரன், எம்.குமார், பரசுராமன், சத்தியலெட்சுமி, சம்பத், கோவிந்தராஜ், பூபதி, எஸ்.எம்.டி.முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தேசிய திருக்கோயிகள் கூட்டமைப்பு மையக்குழு உறுப்பினர் காசிராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×