search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
    X

    தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    தூத்துக்குடி மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

    • புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது அவர் கூறுகையில், மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த காலங்களில் மழையினால் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான ஆர்.எஸ்.பி.ஆர். நகர ஹவுசிங் போர்டு மற்றும் கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அலுவல ர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தற்போது இந்த பகுதிகளில் சாலை மற்றும் வசதிகள் செய்து கொடுத்து உள்ளோம். இதுபோல மாநகர் முழுவதும் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வரு கிறோம் என்றார்.

    தொடர்ந்து கருத்த பாலம் அருகில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகள் நிறைவுற்றதால் சாலைக்கும், பாலத்திற்கும் இடையே கழிவு நீர் செல்லும் ஓடையின் இடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால் சுத்தப்படுத்தும் விதமாக சிறிய அளவிலான கல்வெட்டு அமைப்பதற்கும், மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதனை அகலப்படுத்தி தருவேன் என்று கூறியிருந்தேன்.

    தற்போது அந்த பணிகளும் விரைவில் ஆரம்பமாகும் என்று தெரி வித்தார்.இதனையடுத்து தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.மேயரின் தொடர் நடவடிக்கைக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ் குமார், மாநகராட்சி அதிகா ரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×