என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
வரும் 23-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா
- நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது.
- அனைத்து ரெயில் நிலைய ங்களிலும் ரெயில்வே கால அட்ட வணை வைப்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.
ஆறுமுகநேரி:
நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுக ளுக்கும் மேலாக அயராது முயற்சி எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி ஜில்லா போர்ட் உறுப்பினரான ஆறுமுகநேரி எஸ்.பி. பொன்னையா நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 23-ந் தேதி இவரது சாதனையை பாராட்டியும் நெல்லை - திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து நூற்றாண்டு நிறைவையும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழுவின் ஆலோசனை கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், ஒருங்கி ணைப்பாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் 4 ரெயில்களின் முகப்பில் விழா பதாகைகளுடன் நாங்கள் அமைப்பது தோரண ங்களை ரெயில்வே துறையின் அனுமதியுடன் அமைப்பது, அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்குவது, அனைத்து ரெயில் நிலைய ங்களிலும் ரெயில்வே கால அட்ட வணை வைப்பது, இந்த ரெயில் பாதை திட்டம் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விளக்குவது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறை வேற்றப்பட்டன.
அமைப்பின் நிர்வாகி களான குமரகுரு, அமிர்தராஜ், அய்யப்பன், சிவராமன், ராஜலிங்கம், காசிவிஸ்வ நாதன், ராஜாராம், மோகன் சுந்தர்ராஜ், நடராஜன், முருகன், சண்முகசுந்தரம், கற்பக விநாயகம், கசமுத்து, சுந்தர்ராஜ், சுகுமார், மகேஷ் ராஜன், மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.