search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்- மேயர் தகவல்
    X

    தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்- மேயர் தகவல்

    • தொல்காப்பியர் சதுக்கம் பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.
    • சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதன் நினைவாக தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில்

    5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த "தொல்காப்பியர் நினைவு கோபுரம்" அமைக்கப்பட்டது.

    தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் இந்த இடம் "தொல்காப்பியர் சதுக்கம்" என பெயரிடப்பட்டது.

    இங்கு பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமாக விளங்கியது.

    இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கி விளையாடுவதற்கு இடம் என பார்த்து பார்த்து அமைக்கப்பட்து.

    இப்படி தஞ்சாவூர் அடையாளமாக விளங்கிய தொல்காப்பியர் சதுக்கம் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.

    செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன.

    பூங்கா வளாகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் உள்ளே ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு சென்றனர்.

    இதனால் பூங்காவுக்கு வர பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொல்காப்பியர் சதுக்கத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் அடையாளமாக

    தொல்காப்பியர் சதுக்கம் விளங்கியது. சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    அந்த நிலையை மாற்ற முடிவு செய்துள்ளோம். மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று தொல்காப்பியர் சதுக்கத்தில் விரைவில் பராமரிப்பு , புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

    இதற்கு முன்னர் இருந்ததை விட கூடுதலாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்பட்டு கூடுதலாக உபகரணங்கள் அமைக்கப்படும்.

    சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.

    வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். முழு பாதுகாப்புடன் தொல்காப்பியர் சதுக்கம் இருக்கும்.

    இதன் மூலம் சமூக விரோதிகள் நடமாட்டம் முற்றிலும் இருக்காது.

    மின்விளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    ஒட்டு மொத்தத்தில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தி தொல்காப்பியர் பூங்கா பராமரிக்கப்படும் .

    கலெக்டர் ஒப்புதல் உடன் விரைவில் புனரமைப்பு பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×