search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் கூர்நோக்கு, குழந்தைகள் இல்லத்தை கலெக்டர் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்
    X

    தஞ்சையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை உறுப்பினர் டாக்டர் ஆனந்த் பேட்டி அளித்தார்.

    தஞ்சாவூர் கூர்நோக்கு, குழந்தைகள் இல்லத்தை கலெக்டர் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்

    • அரசாங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
    • பரந்து விரிந்த இடத்தை நன்றாக மேம்படுத்தி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் 32 குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 3 அரசு இல்லங்களும், 15 அரசு மானியம் பெறும் குழந்தைகள் இல்லங்களும் மற்றும் 14 தனியார் குழந்தைகள் இல்லங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இல்லங்களில் ஆண் குழந்தைகள் 721 மற்றும் பெண் குழந்தைகள் 1038 என மொத்தம் 1759 மாணவ, மாணவிகள் உள்ளனர்.

    அரசாங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் இக்குழந்தைகள் இல்லங்கள் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று மதியம் புதுடெல்லி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை உறுப்பினர் டாக்டர் ஆனந்த் , தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர்

    தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்தனர்.

    கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 5 சிறுவர்களிடம் கலந்துரையாடினர் . மேலும், பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது :-

    ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஆய்வு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்து விட்டோம்.

    இன்று தஞ்சாவூரில் ஆய்வு செய்தோம்.

    தஞ்சாவூரில் குழந்தைகள் மற்றும் கூர்நோக்கு இல்லத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்.

    பரந்து விரிந்த இடத்தை நன்றாக மேம்படுத்தி வருகிறார். அவருக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.

    நாங்கள் டெல்லியில் இருந்தவாறே மாசி என்ற செயலி மூலம் கூர்நோக்கு இல்லங்களில் மாணவர்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்கிறோம்.

    இந்த செயலில் அந்தந்த கூர்நோக்கு இல்ல நிர்வாகிகள் தினமும் நடக்கும் விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.

    தஞ்சாவூரில் விரைவில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற விசாரணை தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் , தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல், கூர்நோக்கு இல்ல பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் நன்னடத்தை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×