என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட பார்வதி நாதன்.
நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பயங்கரம்-வாலிபரை வெட்டிக்கொலை செய்தது நண்பர்கள்?-தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
- பார்வதி நாதன் ஆதிபராசக்தி நகரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- சக நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு பார்வதி நாதனை அழைத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் பார்வதி நாதன்(வயது 22). பெயிண்டிங் தொழிலாளி.
வெட்டிக்கொலை
நேற்று இரவு அவர் பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆதிபராசக்தி நகரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
உடனடியாக சிவந்திபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதிநாதன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்குப்பதிவு செய்து பார்வதிநாதனை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்விரோதம்
பார்வதிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி அவர் தனது நண்பர்களுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்லும்படி அவரது தாயார் வேலா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பார்வதி நாதன் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் பாளை கிருஷ்ணா புரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சக நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு அவரை அழைத்துள்ளார். உடனே பார்வதிநாதன் ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி விட்டு வந்துள்ளார். அவ்வாறு வரும் வழியில் மறைந்திருந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பார்வதிநாதன் மற்றும் அவரது நண்பர்க ளுக்கு இடையே மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர் பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த விவகா ரத்தில் பார்வதிநாதனின் நண்பர்கள் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பார்வதி நாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சிவகளை தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகின்றனர். இதனை யொட்டி ஏராளமான போலீ சார் அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.






