search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவசைலம் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
    X

    கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதையும், யாகசாலை அமைக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

    சிவசைலம் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

    • கடையம் அருகே சிவசைலம் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    கடையம்:

    கடையம் அருகே அமைந்துள்ள சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சாமி கோவில் பழமையும், புராண வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். அத்திரி மகரிஷி, கோரக்கர் போன்ற சித்தர்கள், முனிவர்களாலும் வழிபடப்பட்ட ஆலயமாகும். இங்கு உள்ள நந்தி சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். மேலும் இது மேற்கே பார்த்த சிவாலயமாகும். இங்கு நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் கோவிலுக்கான கும்பாபிஷேகம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகபூஜைகள் தொடங்குகிறது. 20-ந் தேதி (திங்கட்கிழமை) கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சாந்தி மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது .

    22-ந் தேதி (புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜைகள், 5-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. 23 - ந்தேதி (வியாழக்கிழமை) ஆறாம் கால யாக பூஜைகளும், விமான மகா கும்பாபிஷேகம் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

    இதற்கான முன்னேற்பாடாக இங்கு உள்ள வாகனங்கள் மற்றும் கொடிமரம் பல்வேறு முன் ஆயத்த பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர். யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர் நாறும்பூநாதன் பட்டர் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

    Next Story
    ×