search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி
    X

    கருங்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி

    • தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.
    • உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான தெற்கு காரசேரி, கீழப்புத்தனேரி ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன்பருவத்திற்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    இப்பயிற்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கி யப்பன் தலைமை தாங்கி தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல், விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.

    கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கீழப்புத்த னேரி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதி, தெற்கு காரசேரி பஞ்சாயத்து தலைவர் பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தோட்டக்கலைத் துறையில் கலைஞர் திட்ட செயல்பாடுகள் குறித்து துணை தோட்டக்கலை அலுவலர் கமலேஷ் விளக்கமளித்தார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் உலகநாதன் தேசிய வேளாண்சந்தை திட்டம் மற்றும் நெல்சாகுபடியில் மதிப்பு கூட்டுதல் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றினார்.உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத், உதவி வேளாண்மை தோட்டக்கலை அலுவ லர்கள் சிவபெருமாள், கோபாலகிருஷ்ணன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துசங்கரி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×