என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆசிரியா் தகுதித் தோ்வு
  X

  ஆசிரியா் தகுதித் தோ்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.
  • நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  நாமக்கல்:

  தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி கடந்த மாா்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். நாளை(சனிக்கிழமை) 19-ந்தேதி வரை நடைபெறும் தாள் - 1 தோ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

  நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,035 போ், நாமக்கல் டிஜிட்டல் ஹப் நிறுவனத்தில் 900 போ், திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறு வனத்தில் 900 போ், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் 900 போ், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 1,716,

  குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களில் 800 போ், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 720 போ் என மொத்தம் 6,971 போ் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதுகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட கல்வித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×