என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது
    X

    காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது

    • திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.
    • பஸ் பயணிகள் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 18) என்பவர் தினமும் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.

    நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததோடு வாலிபரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த பஸ் பயணிகள் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

    Next Story
    ×