

சென்னை:
சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் பென்சிலையா. இவரது மகள் சுனிதா (வயது18). பிளஸ்-2 முடித்து விட்டு வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வருகிற மே மாதம் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பென்சிலையா வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை தேடி வருகிறார்கள்.