என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விஜய் வசந்த் ஆலோசனை
    X

    மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விஜய் வசந்த் ஆலோசனை

    • சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது.
    • இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வடிந்த போதிலும் இந்த பகுதியில் மட்டும் வடியாமல் தேங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து நேற்று மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தண்ணீர் தேங்குவதற்கான காரணங்களை ஆராய்ந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×